10 steps to follow when you have to step out

Step 01

Plan your journey. Take no watches, no rings, no bangles, no dangling earings. Use full sleeve shirt and pant. Wear goggles and masks. Wear footwear which covers your foot fully and is washable

உங்கள் பயணத்தைத் திட்டமிடுங்கள். கைக்கடிகாரங்கள், மோதிரங்கள், வளையல்கள், தொங்கும் காதணிகள் எதுவும் எடுத்து செல்ல வேண்டாம். முழு ஸ்லீவ் சட்டை மற்றும் பேன்ட் பயன்படுத்தவும். கண்ணாடி மற்றும் மாஸ்க்கை அணிந்து செல்லவும். உங்கள் பாதத்தை முழுமையாக மூடக்கூடிய காலணிகளை அணியவும்

Step 02

Keep a plastic tray just outside the door. Also keep a bucket of water with soap outside. Take hand sanitizer with you. Also remember to take your own washable shopping bag with you.

ஒரு பிளாஸ்டிக் தட்டை கதவுக்கு வெளிய வைக்கவும் . சோப்புடன் ஒரு வாளி தண்ணீரை வெளியே வைக்கவும். ஹாண்ட் சானிடைசர் உடன் எடுத்து செல்லவும் . துவைக்கக்கூடிய ஷாப்பிங் பையை உங்களுடன் எடுத்துச் செல்லவும்.

Step 03

Go straight to the shop. Once you reach there make sure the shop is not crowded. Use hand sanitizer or wash your hands with soap (If provided) before entering the shop.

நேராக கடைக்குச் செல்லுங்கள். நீங்கள் அங்கு சென்றதும் கடை கூட்டமாக இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஹாண்ட் சானிடைசர் அல்லது சோப்பை பயன்படுத்தி கையை நன்கு சுத்தப்படுத்தவும்.

Step 04

Don't touch any surface. Use elbow or your body to open the door. Don't use the shopping cart provided by the store. Rather use your own shopping bag to collect the required items. Remember to maintain 6 feet distancing with others at all times and don't forget to keep your hands away from your face.

எந்த ஒரு தேவையற்ற பொருளின் மேலும் கை வைப்பதை தவிர்க்கவும் . கதவைத் திறக்க முழங்கை அல்லது உங்கள் உடலைப் பயன்படுத்தவும். கடையில் உள்ள தள்ளு வண்டியோ அல்லது கூடையோ பயன்படுத்த வேண்டாம். தேவையான பொருட்களை சேகரிக்க உங்கள் சொந்த ஷாப்பிங் பையை பயன்படுத்தவும். எல்லா நேரங்களிலும் மற்றவர்களுடன் 6 அடி தூரத்தை பராமரிக்க நினைவில் கொள்ளுங்கள், மேலும் உங்கள் கைகளை உங்கள் முகத்திலிருந்து விலக்கி வைக்க மறக்காதீர்கள்.

Step 05

Keep the shopping bag open for the store clerk to take the items from the bag and bill it and ask him/her to return it into the bag without touching. Use digital payment method and avoid using currency notes

கடை கேஷியர் பில் செய்தவுடன் பெருட்களை பையில் வைக்க ஷாப்பிங் பையைத் திறந்து வைத்திருங்கள். டிஜிட்டல் கட்டண முறையைப் பயன்படுத்தவும், ரூபாய் நோட்டுகளை பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்

Step 06

Once you come out of the store wash your hands or use hand sanitizer

நீங்கள் கடையிலிருந்து வெளியே வந்ததும் கைகளை கழுவுங்கள் அல்லது ஹாண்ட் சானிடைசர் பயன்படுத்துங்கள்.

Step 07

Ring up home when u reach close by and ask someone at home to keep the front door open.

நீங்கள் அருகில் வரும்போது வீட்டிலுள்ள ஒருவரிடம் முன் கதவைத் திறந்து வைக்கச் சொல்லுங்கள்.

Step 08

Once you reach the house you should keep the keys, sanitiser bottle, phone and the items you purchased in the tray kept outside the door. Wash your hands and feet using soap for minimum 20 sec. Also using a clean cloth and sanitiser wipe the items you have placed in the tray. Wash your hands with soap water again

நீங்கள் வீட்டை அடைந்ததும் சாவி, சானிடைசர் பாட்டில், கைபேசி மற்றும் நீங்கள் வாங்கிய பொருட்களை பிளாஸ்டிக் தட்டில் வைக்கவும். கை, கால்களைக் கழுவுங்கள். சானிடைசர் பயன்படுத்தி நீங்கள் தட்டில் வைத்த பொருட்களை துடைக்கவும். உங்கள் கைகளை மீண்டும் சோப்பு போட்டு கழுவ வேண்டும்.

Step 09

Now enter the house without touching anything. Make sure the bathroom doors are kept open

இப்போது எதையும் தொடாமல் வீட்டிற்குள் நுழையுங்கள். குளியலறையின் கதவுகள் திறந்த நிலையில் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

Step 10

Remove your clothes and dip them in a bucket of detergent soap water. Then take a head bath with shampoo and body bath with soap. Dry the cloths under sun.

உங்கள் துணிகளை அகற்றி சோப்பு நீரில் நனைக்கவும். பின்னர் ஷாம்பு கொண்டு தலை குளிக்கவும், சோப்புடன் உடல் குளியல் எடுக்கவும். வெயிலின் கீழ் துணிகளை உலர வைக்கவும்.